தெல்தெனிய காரில் சடலமாக மீட்கப்பட்ட பெண்; காதலன் தலைமறைவு..!

அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய 33 வயதுடைய பெண் உடற்பயிற்சி நிபுணரின் சடலம் தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த பெண்ணின் காதலன் என சந்தேகிக்கப்படும் நபர், அவரது சடலத்தை காரில் கொண்டு வந்து தெல்தெனிய பகுதியில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்று (17) பிற்பகல், கார் ஒன்றுக்குள் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று, பூட்டப்பட்டிருந்த காரின் கதவை உடைத்து சடலத்தை மீட்டனர்.

விசாரணையில், உயிரிழந்தவர் வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் என்பதும், அம்பாறை வைத்தியசாலையில் உடற்பயிற்சி நிபுணராக பணியாற்றியதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் CCTV காட்சிகளில், மயக்க நிலையில் இருந்த பெண்ணை அவரது காதலன் அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும், சடலம் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியவரும் அதே நபராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தற்போது சந்தேகநபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகிய பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் உறுதியாகத் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



Comments

Popular posts from this blog

பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ரூபா 23 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட போசாக்கான உணவு விற்பனை நிலையம் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு..!

ஹிஜ்ரி புத்தாண்டை முன்னிட்டு முஹர்ரம் தின நிகழ்வு..!