ஹிஜ்ரி புத்தாண்டை முன்னிட்டு முஹர்ரம் தின நிகழ்வு..!

ஹிஜ்ரி புத்தாண்டை முன்னிட்டு முஹர்ரம் தின நிகழ்வு..!

மொனராகலை மாவட்டத்தின் வெள்ளவாய கல்வி வலயத்திற்கு உட்பட்ட மொ/மஹ வெலமுள்ள முஸ்லிம் வித்தியாலயத்தில் ஹிஜ்ரி புத்தாண்டை முன்னிட்டு முஹர்ரம் தின நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திரு. S.M. முஸம்மில் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, இஸ்லாம் பாட ஆசிரியரும் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான திருமதி M. பாத்திமா சிம்லா அவர்கள் ஏற்பாடு செய்து நெறிப்படுத்தினார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கௌரவ ரியாஸ் மௌலவி (யா லபோவ) அவர்கள் கலந்துகொண்டு, முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள், ஹிஜ்ரி புத்தாண்டின் முக்கியத்துவம் மற்றும் இஸ்லாமிய விழுமியங்கள் தொடர்பாக பயனுள்ள சிறப்புரையாற்றினார்.

மேலும், பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். மாணவர்களின் சமய அறிவையும் ஒழுக்கப் பண்புகளையும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

நிகழ்வின் நிறைவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டதுடன், புதிய ஹிஜ்ரி ஆண்டு 1448 அனைவருக்கும் அமைதி, வளம், ஆரோக்கியம் மற்றும் நற்கருமங்களில் முன்னேற்றத்தை வழங்கிட பிரார்த்தனை செய்யப்பட்டது.











Comments

Popular posts from this blog

பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ரூபா 23 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட போசாக்கான உணவு விற்பனை நிலையம் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு..!

தெல்தெனிய காரில் சடலமாக மீட்கப்பட்ட பெண்; காதலன் தலைமறைவு..!