பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ரூபா 23 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட போசாக்கான உணவு விற்பனை நிலையம் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு..!
ரூபா 23 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட போசாக்கான உணவு விற்பனை நிலையம் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ரூபா 23 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட போசாக்கான உணவு விற்பனை நிலையம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் எம். எஸ். சுல்தான் சத்தார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும், இலங்கை அரசியலமைப்புப் பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கௌரவ அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர் அவர்கள் கலந்துகொண்டதுடன், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜௌபர், கணக்காளர் எம்.எப். பர்ஹான், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள் சம்சுன் அலி மற்றும் இப்திகார் அஹமட் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
மேலும், பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு அதிகாரிகள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகள், பிரஜா சக்தி தவிசாளர்கள், தேசிய மக்கள் சக்தி செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
-மக்கள் குரல் செய்தி-


Comments
Post a Comment