Posts

Showing posts from June, 2026

பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ரூபா 23 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட போசாக்கான உணவு விற்பனை நிலையம் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு..!

Image
ரூபா 23 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட போசாக்கான உணவு விற்பனை நிலையம் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ரூபா 23 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட போசாக்கான உணவு விற்பனை நிலையம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் எம். எஸ். சுல்தான் சத்தார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும், இலங்கை அரசியலமைப்புப் பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர் அவர்கள் கலந்துகொண்டதுடன், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜௌபர், கணக்காளர் எம்.எப். பர்ஹான், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள் சம்சுன் அலி மற்றும் இப்திகார் அஹமட் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். மேலும், பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு அதிகாரிகள், பெண்கள்...

சம்மாந்துறையின் அடையாளம் சீரழிந்தது எப்படி? ​வருமானம் ஈட்டிய வளாகம் ஏன் செயலிழந்தது? – சம்மாந்துறை நீச்சல் தடாகத்தின் பின்னணி!

Image
 - மின்மினி மின்ஹா- சம்மாந்துறையின் பெருமைக்குரிய ஜனாதிபதி விளையாட்டு வளாகத்திற்குள் அமைந்துள்ள நீச்சல் தடாகம், கடந்த 2026 ஜனவரி 10 முதல் முற்றிலும் செயலிழந்த நிலையில் காணப்படுவது பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாதந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்திய இந்த தடாகம் மூலம் சுமார் ரூ.150,000 வருமானம் ஈட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் இன்று முழுமையாக முடங்கிய நிலையில் உள்ளது. மக்கள் கோரிக்கையைத் தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் A. ஆதம்பாவா ஆகியோர் வளாகத்தை நேரில் பார்வையிட்டதுடன், மீளமைப்பிற்கான உத்தியோகபூர்வ கோரிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 9 ஆம் திகதி நடைபெற்ற சம்மாந்துறை பிரதேச சபை அமர்வில், நீச்சல் தடாகத்தை மீளச் செயற்படுத்துவதற்கான அவசர தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது வெறும் கட்டடமல்ல; சம்மாந்துறை இளைஞர்களின் விளையாட்டு கனவுகளுக்கான அடித்தளம். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக...

தெல்தெனிய காரில் சடலமாக மீட்கப்பட்ட பெண்; காதலன் தலைமறைவு..!

Image
அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய 33 வயதுடைய பெண் உடற்பயிற்சி நிபுணரின் சடலம் தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த பெண்ணின் காதலன் என சந்தேகிக்கப்படும் நபர், அவரது சடலத்தை காரில் கொண்டு வந்து தெல்தெனிய பகுதியில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று (17) பிற்பகல், கார் ஒன்றுக்குள் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று, பூட்டப்பட்டிருந்த காரின் கதவை உடைத்து சடலத்தை மீட்டனர். விசாரணையில், உயிரிழந்தவர் வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் என்பதும், அம்பாறை வைத்தியசாலையில் உடற்பயிற்சி நிபுணராக பணியாற்றியதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நுவரெலியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் CCTV காட்சிகளில், மயக்க நிலையில் இருந்த பெண்ணை அவரது காதலன் அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும், சடலம் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியவரும் அதே நபராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தற்போது சந்தேகநபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை பொ...

ஹிஜ்ரி புத்தாண்டை முன்னிட்டு முஹர்ரம் தின நிகழ்வு..!

Image
ஹிஜ்ரி புத்தாண்டை முன்னிட்டு முஹர்ரம் தின நிகழ்வு..! மொனராகலை மாவட்டத்தின் வெள்ளவாய கல்வி வலயத்திற்கு உட்பட்ட மொ/மஹ வெலமுள்ள முஸ்லிம் வித்தியாலயத்தில் ஹிஜ்ரி புத்தாண்டை முன்னிட்டு முஹர்ரம் தின நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. S.M. முஸம்மில் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, இஸ்லாம் பாட ஆசிரியரும் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான திருமதி M. பாத்திமா சிம்லா அவர்கள் ஏற்பாடு செய்து நெறிப்படுத்தினார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கௌரவ ரியாஸ் மௌலவி (யா லபோவ) அவர்கள் கலந்துகொண்டு, முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள், ஹிஜ்ரி புத்தாண்டின் முக்கியத்துவம் மற்றும் இஸ்லாமிய விழுமியங்கள் தொடர்பாக பயனுள்ள சிறப்புரையாற்றினார். மேலும், பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். மாணவர்களின் சமய அறிவையும் ஒழுக்கப் பண்புகளையும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. நிகழ்வின் நிறைவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டதுடன், புதிய ஹிஜ்ரி ஆண்டு 1448 அனைவருக்கும் அமைதி, வளம், ஆ...